கல்லில் உறைந்த கணம்


கீழே உள்ளது புள்ளமங்கை பிரஹ்மபுரீஸ்வரர் ஆலயத்தில் எடுத்த படம்.
பராந்தகன் I காலத்துக் கோவில்(லாம்). Miniature சிற்பங்களுக்காக பிரசித்தம்.

ராமாயணக் கதை சங்ககாலம் தொட்டே தமிழ்நாட்டில் அறியப்பட்டதுதான் என்றாலும், ஏனோ ராமாயணச் சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் இல்லை.

கைலாயமலையை உலுக்கும் ராவணன் சிற்பங்கள் கூட உண்டு: காஞ்சி கைலாசநாதர் கோவிலில் அலறும் ராவணன் (பெயர்க்காரணச்சிற்பம்?).

ஆனால் ராமாயணக் காட்சிகள் இல்லை! புள்ளமங்கையில் காணக்கிடைப்பவையே முதல் ராமாயணச் சிற்பங்கள்.

அங்கே பார்த்த பற்பலவற்றில் என்னைப் பெரிதும் கவர்ந்த பலவற்றில் ஒன்று இது.




இலக்குவனின் ஆக்ரோஷத்தை கண்டு  சீதை இராமனை நோக்கி நகர உந்திய மருட்சியை - முகம் மொத்தமாக மழுங்கிவிட்ட இந்நிலையிலும் -  நமக்கு மிகத்தெளிவாக கடத்திய இந்தச் சிற்பியை என்னவென்பது?



சிற்பத்தின் இடப்பக்கத்தில் நடந்திகொண்டிருக்கும் actionஐப் பாருங்கள். கல்லில் உறைந்த கணம். கதையின் போக்கையே மாற்றும் அதிமுக்கிய கணம் எத்தனை உயிர்ப்புடன் இங்கே வடிக்கப்பட்டிருக்கிறது!

கோவில் பதிகம் சம்பந்தர் பாடியிருக்கிறார். பராந்தகன் கல்கோவிலாக எடுத்துக்கட்டும் முன் வந்திருப்பார்.

நான் போன வாரம் போயிருந்தேன்.

இடைப்பட்ட காலத்தில் அணுக்கர் ஒருவர் சென்று, குறிப்பாக இந்த சிற்பத்தைப் பார்த்திருக்கிறார் என்று தோன்றுகிறது:

நில் அடீஇ ‘எனக் கடுகினன்,

    பெண் என நினைந்தான்;
வில் எடாது, அவள் வயங்கு
    எரி ஆம் என விரிந்த
சில் வல் ஓதியைச்
    செங்கையில் திருகுறப் பற்றி,
ஒல்லை ஈர்த்து, உதைத்து,
    ஒளி கிளர் சுற்று வாள் உருவி



 "நில்லடீ!" என்று அதட்டி விரைந்தான்
இவள் ஒரு பெண் என்று நினைத்தான்
வில் எடுக்காது - அவளது விளங்குகின்ற
தீப்போன்ற பரந்து விரிந்த
சிலவாகிய வலிய கூந்தலை
தன் சிவந்த கைகளால் சுருட்டிப் பற்றி
பிடித்து இழுத்து (காலால்) உதைத்து
ஒளி வீசும் உடை வாளை எடுத்து

பி.கு 1:  வால்மீகியில் இந்தக் கணம் துல்லியமாக விவரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆரண்ய காண்டம் 18 சர்க்கம்: 22 சுலோகம்

Thus instructed (by Rama), powerful Lakshmana took position by the side of Rama, angrily lifted the sword and cut off her nose and ears.



பி.கு 2: இந்தக்கோவிலின் மேலும் சில பிரமாதமான சிற்பங்களை இங்கே காணலாம்.

Comments

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director